இஸ்ரேல் நிலைகளை நோக்கி ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா படையினர், ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் தங்கள் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா படையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், தெற்கு லெபனானில் இருந்து முன்னதாக வீசப்பட்ட ஏவுகணை குண்டுகளுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவே தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ துணைத் தளபதி அம்னான் ஷெஃப்ளர் கூறுகையில், ‘லெபனானிலிருந்து தங்கள் பகுதிகளை நோக்கி 19 ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டது.
அவற்றில் 3 குண்டுகள் லெபனான் எல்லைக்குள்ளேயே விழுந்தது. எஞ்சிய 16 ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்புத் தளவாடமான அயன் டோமின் ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன’ என கூறினார்.