இந்தியாவில் புதிதாக 38 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 18 இலட்சத்து 95 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் வைரஸ் தொற்றினால் 4 இலட்சத்து 27 ஆயிரத்து 371 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை 3 கோடியே 10 இலட்சத்து 55 ஆயிரத்து 861 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
மேலும் 4 இலட்சத்து 12 ஆயிரத்து 153 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.