இலங்கையில் நேற்று ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 291 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
38,665 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதாகவும், 17,547 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 46,113 பேருக்கு முதல் சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதுடன் 2,545 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், 3,830 பேருக்கு பைசர் தடுப்பூசியின் முதல் டோஸும் ஆறு பேருக்கு இரண்டாவது டோஸும் வழங்கப்பட்டது.
மேலும் 2,490 பேருக்கு முதல் மொடர்னா தடுப்பூசி டோஸும் இரண்டாவது டோஸ் 126 பேருக்கும் மடர்னா தடுப்பூசி 5,465 பேருக்கும் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில் தடுப்பூசி நடவடிக்கை தொடங்கியதில் இருந்து இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி 10,871,332 பேருக்கும் 2,749,350 பேருக்கும் முழுமையாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.