2020 ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், தங்கப்பதக்க பட்டியலுக்கு அமைய சீனா தொடர்ந்தும் முன்னணியில் உள்ளது.
இதற்கு அமைய முதல் இடத்திலுள்ள சீனா 38 தங்கம், 31 வெள்ளி, 18 வெண்கல பதக்கங்களுமாக மொத்தம் 87 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
அமெரிக்கா 36 தங்கம் 39 வெள்ளி 33 வெண்கல பதக்கங்களைப் பெற்று 108 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
போட்டிகளை நடத்தும் ஜப்பான் 27 தங்கம், 12 வெள்ளி. 17 வெண்கல பதங்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இதேவேளை, ரஷ்ய ஒலிம்பிக் குழு 20 தங்கம், 26 வெள்ளி மற்றும் 23 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று நான்காவது இடத்திலுள்ளது.
பிரித்தானியா 20 தங்கப் பதக்கங்களுடன் 5வது இடத்திலும் அவுஸ்ரேலியா 17 தங்கப் பதக்கங்களுடன் 6 ஆவது இடத்திலும் உள்ளன.