டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து இறுதிப்போட்டியில் பிரேசில் அணி, ஸ்பெயினை 2 : 1 என வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றுள்ளது.
யோகோகாமாவில் நேற்று இடம்பெற்ற ஆண்களுக்கான கால்பந்து இறுதி போட்டியில் ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி பிரேசில் தங்கப் பதக்கத்தை வென்றது.
ஏற்கனவே பிரேசில் அணி ரியோ 2016 ஒலிம்பிக் போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியை அடுத்து இரண்டாவது முறையாகவும் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளது.
அதன்பிரகாரம் ஒலிம்பிக் ஆண்கள் கால்பந்தில் தங்கப் பதக்கங்களைத் தக்கவைக்கும் ஐந்தாவது நாடாக பிரேசில் அணி மாறியுள்ளது.