சீனாவிலுள்ள 3 மாகாணங்களில் டெல்டா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் டெல்டா வைரஸ், மாறுபாடு அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் என்டிஜன், பீ.சி.ஆர்.பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் டெல்டா வைரஸ் தொற்று கிழக்கு விமான நிலையத்தில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூலை 20ஆம் திகதி, நாஞ்சிங் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒன்பது தொழிலாளர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை ஜியாங்சு மாகாணத்தில் 171பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று பரவலை புவியியல் ரீதியாக பார்க்கும்போது, சீனாவில் பல மாதங்களுக்கு பின்னர் பரவிய மிகப்பெரிய வைரஸ் பரவலாகும்.
மேலும் கொரோனா பரிசோதனை, முடக்கம் மற்றும் விரைவான தொடர்பு தடத்தை நம்பியிருக்கும் சீனாவின் ஆக்கிரமிப்பு கட்டுப்பாட்டு முயற்சிகள் ஆகியவற்றுக்கு குறித்த விடயம் தற்போது சவாலாக அமைந்துள்ளது.
இந்த வைரஸ் முதன்முதலில் மத்திய நகரமான வுஹானில் தோற்றம் பெற்றது. ஆனால் சீனா, வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நாடாக வெளியுலகத்துக்கு காட்டி, அதன் பொருளாதாரத்தை மீட்கும் செயற்பாட்டை ஆரம்பித்தது.
இதேவேளை வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நூறாயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் உள்ள ஜியாங்சுவினை, அதிகாரிகள் முடக்கினர் என தொற்றுநோய் தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினர் லு ஜிங் அண்மையில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இணைய கஃபேக்கள், ஜிம்கள், சினிமா திரையரங்குகள் மற்றும் மதுபானசாலைகள் மற்றும் நாஞ்சில் நூலகங்கள் ஆகியனவும் மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜியாங்சு நகரத்தில் 9.2 மில்லியன் குடியிருப்பாளர்கள், இரண்டு முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என லு ஜிங் கூறியுள்ளார்.
அத்துடன் டெல்டா வைரஸ் மாறுபாடு, கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு சவால்களை ஏற்படுத்துகிறது. சிச்சுவான் தென்மேற்கு மாகாணத்தில் அண்மையில் மூன்று பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது எனவும் பெய்ஜிங்கில் இரண்டு நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன தலைநகரின் புறநகரில் வசிக்கும் பெய்ஜிங் நோயாளிகள், திருமணமான தம்பதியர்கள் உள்ளிட்டோர் சுற்றுலா மையத்திலிருந்து திரும்பிய பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் 650 க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை தொற்றுநோயைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் எந்தவிதமான தளர்ச்சியும் இருக்கக்கூடாது என நோய் கட்டுப்பாட்டு நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பாங் ஜிங்ஹுவோ, அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட பெரும்பாலானோர், ஏற்கனவே தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் புதிய வகைகளுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் போதுமானதாக இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் சீனா இந்த வருட இறுதிக்குள், தனது 1.4 பில்லியன் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 65 சதவிகிதமானோருக்காவது தடுப்பூசியை செலுத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.