கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் இதுவரையில், 2 இலட்சத்து 51 ஆயிரத்து 474 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸும் 533 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.