பருவநிலை மாற்றம் குறித்து ஐபிசிசி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவசர உலகளாவிய நடவடிக்கைக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
கோப்26 என்ற ஐ.நா.வில் நடத்தப்படும் உச்சி மாநாடு எதிர்வரும் நவம்பரில் பிரிட்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு எச்சரிக்கை அழைப்பாக இதனை கருதுவதாக பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை எடுக்குமாறும் இயற்கையைப் பாதுகாக்கவும் அதற்குரிய நிதியுதவிகளை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் உலகம் பேரழிவைத் தவிர்ப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது என இந்த உச்சிமாநாட்டை முன்னின்று நடத்தும் பிரித்தானிய அமைச்சர் அலோக் சர்மா கூறியுள்ளார்.