இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 111 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
56 ஆண்களும் 55 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 953 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 32 ஆயிரத்து 947ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 2 இலட்சத்து 95 ஆயிரத்து 518 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 32 ஆயிரத்து 207 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.