கேரளாவில் அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை ஒட்டி உள்ளூர் மட்டத்திலான கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளன.
இதன்படி ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடவோ, பெருமளவில் பொதுமக்கள் ஒன்று கூடவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தலைமை செயலாளரும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான வி.பி.ராய் தெரிவித்துள்ளார்.
புதிய பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் பரிசோதனை அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்த அவர், சபரிமலை அய்யப்பன் கோவில் யாத்திரை 15 ஆம் திகதி ஆரம்பமாகுகின்ற நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க நாள் ஒன்றுக்கு 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.