அவுஸ்ரேலிய தலைநகர் கான்பெர்ராவில் ஒரு வருடத்திற்கு பிறகு முதல் கொவிட்-19 தொற்று இனங்காணப்பட்டுள்ளதால், அங்கு ஒரு வாரத்துக்கு முடக்கநிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முடக்கநிலை கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) உள்ளூர் நேரப்படி 17:00 மணிக்கு நடைமுறைக்கு வரும்.
தலைநகரப் பகுதி முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் 400,000 மக்கள் வசிக்கிறார்கள்.
ஏனெனில், பாதிக்கப்பட்ட நபருக்கு எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது அதிகாரிகளுக்குத் தெரியாது. ஆகையாலேயே முடக்கநிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸின் பெரிய பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் விக்டோரியாவில் மெல்பேர்னில் இதேபோன்ற கட்டுப்பாடுகள் குறைந்தது இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படவுள்ளன.
சிட்னியில் முடக்கநிலை விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய, கூடுதல் இராணுவ வீரர்கள் அழைக்கப்படலாம் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிட்னியின் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவுகளை அமுல்படுத்துவதற்கு ஏறக்குறைய 580 இராணுவ வீரர்கள் ஏற்கனவே பொலிஸாருக்கு உதவி வருகின்றனர்.