இலங்கையில் நேற்று 3 இலட்சத்து 73 ஆயிரத்து 661 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
22,939 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதாகவும் 1,086 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 66,722 பேருக்கு முதல் சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதுடன் 276,476பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், 164 பேருக்கு பைசர் தடுப்பூசியின் முதல் டோஸும் 6,274 பேருக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.