கரீபியன் நாடான ஹைட்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 304 பேர் உயிரிழந்ததுடன் 1800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனை அடுத்து அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார்.
மேற்கு துறை, தெற்கு துறை, நிப்பேஸ் மற்றும் கிராண்ட் ஆன்ஸ் ஆகிய பகுதிகளில் அவசரநிலை அமுலில் இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை காலை 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன.
இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2010 ம் ஆண்டு ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் இருந்து மீண்டும் வரும் ஹைட்டியில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தற்போது பதிவாகியுள்ளது.