ஜப்பானின் பல பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏழு மாகாணங்களில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
புகுவோகா மற்றும் ஹிரோஷிமா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிக அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாகசாகி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவர் மற்றும் மகள் காணாமல் போயுள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகளுக்காக 150 க்கும் மேற்பட்ட படையினர், பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் மேற்குப்பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.