பயணக்கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க முயன்ற 582 பேர் திருப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேநேரம், கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 54 ஆயிரத்து 359 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிவேக வீதிகளிலும் விஷேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.