உணவு சமைத்து உட்கொள்வதற்கு மண்பாண்ட உற்பத்திகளை பயன்படுத்துவதில் தற்போது மக்கள் ஆர்வம் காட்டி வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
அந்தவகையில் கிளிநொச்சி- விசுவமடு பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், பல வருட காலமாக தமது வாழ்வாதாரமாக மண்பாண்ட உற்பத்தியினை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த மண்பாண்ட உற்பத்தி தொடர்டபாக அவர்கள் கூறியுள்ளதாவது, “மண்பாண்ட உற்பத்திகளில், காலத்துக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது.
அதற்கமைய மக்களின் மனங்களை கவரக்கூடிய வகையில் மண்பாண்ட உற்பத்திகளை செய்து வருகின்றோம்.
மேலும் மண்பாண்ட உற்பத்தியினை பயன்படுத்தி, உணவு சமைத்து உண்பதன் ஊடாக பல நலனை பெறமுடியும்.
அலுமினிய பாத்திரத்தில் சமைப்பதன் ஊடாக பல நோய்த்தாக்கங்கள் ஏற்படுகின்றன.
எனவேதான் வியாபாரம் மட்டுமன்றி மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இவ்வகையான பொருட்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகின்றோம்.
தற்பொழுது இப்பொருட்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில் பல்வகையான பொருட்களையும் உற்பத்தி செய்து, விற்பனை செய்கின்றோம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.