கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பிற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைவருக்கும் குறிப்பிட்ட காலத்துக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது என்பது சவாலானது. இந்தியாவை விட அமெரிக்காவிடம் அதிக அளவில் தடுப்பூசிகள் உள்ளன.
ஆனால் நாட்டில் இதுவரை 16 கோடி பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் தடுப்பூசிகளை மலிவாக மக்களிடம் கொண்டு சேர்த்தலில் வேறு எந்தவொரு நாட்டை காட்டிலும் இந்தியா சிறப்பாக பணிப்புரிந்துள்ளது”எனத் தெரிவித்துள்ளார்.