இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 24 ஆயிரத்து 725 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 22 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 14 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 3 இலட்சத்து 76 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 438 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 32 ஆயிரத்தைக் கடந்துள்ளது.