கொரோனா வைரஸ் தொற்று சட்டமூலம் மீதான விவாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.
இதற்கமைய இன்று முற்பகல் 10.00 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளதுடன், முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை கொரோனா வைரஸ் தொற்று சட்டமூலம் தொடர்பாக விவாதம் இடம்பெறவுள்ளது.
அத்தோடு, உற்பத்தி வரி சட்டத்தின் கீழான 03 கட்டளைகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் ஆகியவற்றையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் கொரோனா சூழலைக் கருத்திற்கொண்டு இவ்வாரத்தில் நாடாளுமன்றத்தை இன்றைய தினம் மாத்திரம் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.