கிண்ணியா- ஆலங்கேணியில் தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (திங்கட்கிழமை) மாலை, நவராத்திரியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட இருந்த தீ பள்ளயத்துக்காக, குழி (தீ மிதிப்பு) ஒன்றை வெட்டும்போது அக்குழியிலிருந்து பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காணி உரிமையாளர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கைக்குண்டை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட குண்டை செயலிழக்கச் செய்வதற்கு தேவையான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.