கர்ப்பிணித் தாய்மார்களுக்கென தனிப்பட்ட தடுப்பூசி செலுத்தல் மையங்களை ஆரம்பிக்க வேண்டும் என குடும்பநல சுகாதார சேவை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி மையங்களுக்கு கர்ப்பிணித் தாய்மார்கள் செல்வதால், அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் தடுப்பூசி மையங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் மத்தியில், டெல்டா திரிபு தொற்று உடையவர்கள் இருக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலோ அல்லது பிரதேச வைத்தியசாலையிலோ வாரத்திற்கு ஒரு முறையேனும் அல்லது சில மணித்தியாலங்கள் ஒதுக்கியேனும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.