பெகாஸஸ் செயலி மூலம் உளவு பார்த்ததாகக் கூறப்படும் முறைப்பாடுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பக்க பதில் மனுவிலேயே மத்திய அரசு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் தவறான கருத்துகளைக் களைய நிபுணர் குழுவை நியமித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் மத்திய அரசு குறித்த மனுவில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கினை விசாரணை செய்த தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவினர் பெகாஸஸ் செயலி குறித்த விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.