கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கி புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிட்டுள்ளது.
குறித்த வழிகாட்டல்களுக்கு அமைவாக இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேறு விடயங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சமீபத்திய சுகாதார வழிகாட்டுதல்களின் படி ஷொப்பிங் மால்கள் இன்று முதல் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியே வர அனுமதி வழங்கப்படும்.
மறு அறிவித்தல் வரை அனைத்து முன்பள்ளிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி சார் நிறுவங்கள் மூடப்பட வேண்டும்.
இரண்டு வாரங்களுக்கு பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட வேண்டும், ஸ்பாக்கள், உடற்பயிற்சி கூடங்கள், உட்புற வளாகங்கள், சிறுவர்கள் பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி மறுப்பு.
நேற்று முதல் திருமண வைபவங்களுக்கு தடை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் வழிபாட்டு தளங்களில் ஒன்றுகூடவும் நிகழ்வுகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், கடற்கரையில் ஒன்றுகூடுதல் மற்றும் நீச்சல் தடாகங்களை பயன்படுத்துவதற்கும் எதிர்வரும் 31ஆம் திகதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.