இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 35 ஆயிரத்து 797 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 23 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 15 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
அதேநேரம் 3 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 511 பேர் உயிரிழந்துள்ள நிலையில். உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 33 ஆயிரத்தைக் கடந்துள்ளது.