ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு கூட்டத்திற்கு பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், பிரித்தானியா உள்ளிட்ட 60 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் எதிர்வரும் 24ஆம் திகதி சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தானின் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படும் என்பதுடன், முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறத் தொடங்கிய நிலையில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பறிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் எதிர்வரும் 24ஆம் திகதி சிறப்பு கூட்டத்தை கூட்டுகிறது.