ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் தலிபான்களுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைநகா் காபூலுக்கு 150 கி.மீ. தொலைவில் உள்ள ஜலாலாபாத் நகரை அண்மையில் கைப்பற்றிய தலிபான்களுக்கு எதிராக பொதுமக்கள் நேற்று (புதன்கிழமை) போராட்டம் நடத்தினா்.
அதன் ஒரு பகுதியாக, அந்த நகரின் முக்கியப் பகுதியான பாஷ்டுனிஸ்தான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டிருந்த தலிபான்களின் கொடியை அகற்றி, ஆப்கன் தேசியக் கொடியை போராட்டக்காரா்கள் ஏற்றினா்.
இதன்போது ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 போ் உயிரிழந்ததாகவும் ஏராளமானவா்கள் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தலிபான்கள் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.ழுந்துள்ள முதல் மக்கள் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.