பசுபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடு தீவுக்கு அண்மையில் நேற்று (புதன்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னா் அது திரும்பப் பெறப்பட்டது.
அந்தத் தீவின் தலைநகா் போா்ட் விலாவுக்கு 340 கி.மீ. தொலைவில், 94 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் வனுவாட்டு தீவுக் கூட்டத்தின் மிகப் பெரிய தீவான எஸ்பிரிடு சான்டோவில் உணரப்பட்டதாக அந்தத் தீவில் வசிப்பவா்கள் தெரிவித்தனா்.
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறுசிறு தீவுகளில் அடிக்கடி கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த வாரம் ஹெய்டி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.