டெல்டா கொவிட் மாறுபாடு அலைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடுவதால், அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியின் முடக்க நிலை கட்டுப்பாடுகள், செப்டம்பர் மாத இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் ஐந்து மில்லியன் குடியிருப்பாளர்கள் ஜூன் மாத இறுதியில் இருந்து வீட்டிலேயே தங்குவதற்கான உத்தரவுகளின் கீழ் உள்ளனர்.
கடந்த வாரத்தில் நோய்த்தொற்றுகள் இருமடங்காக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை பதிவான 681 தொற்றுக்குப் பிறகு இன்று 642 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.
திங்கட்கிழமை முதல், நகரத்தின் மிக மோசமான புறநகர்ப் பகுதிகளில் இரண்டு மில்லியன் மக்கள் 21.00-05.00 முதல் தினசரி ஊரடங்கு உத்தரவின் கீழ் வாழ்வார்கள்.
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறுகையில், ‘சரியானதைச் செய்யும் சமூகங்களில் பெரும்பான்மையான மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் நமது உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக நாங்கள் இந்த கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்’ என கூறினார்.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அவுஸ்ரேலியா அதன் அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையை வியாழக்கிழமை பதிவுசெய்தது.