இந்தியாவில் இருந்து மேலும் 40 தொன் ஒட்சிசனை ஏற்றிய SLNS சக்தி என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை, சென்னை துறைமுகத்திலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஒட்சிசன் தாங்கிகளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.