இலங்கையில் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்கள் எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்களே என சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அந்தப்பிரிவின் பதில் பிரதானி விசேட வைத்தியர் சமித்த கினிகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுவரை நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் அடிப்படையில் 91 சதவீதமானவர்கள் எந்தவொரு தடுப்பூசியையும் பெறாதவர்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒரு தடுப்பூசி மாத்திரம் பெற்றவர்களில் 8 சதவீதமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சதவீதமானவர்கள் மட்டுமே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற நிலையில் உயிரிழந்தனர் என்றும் விசேட வைத்தியர் சமித்த கினிகே குறிப்பிட்டுள்ளார்.