நைஜீரியாவில், பயங்கரவாதிகள் பணய தொகை பெற்று கொண்டு, கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப் பாடசாலையில் கடத்தப்பட்ட மாணவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், பணய தொகை கொடுக்காமல் மீதமிருந்த மாணவர்களை பயங்கரவாதிகள் வேறு இடத்துக்கு கடத்தி சென்றனர்.
கடுனா மாநிலத்தின் தலைநகரான கடுனாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலையில், 121 மாணவர்களை பணய கைதிகளாக கடத்தி சென்ற பயங்கரவாதிகள், ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமும் பெருமளவான தொகையை கோரியுள்ளனர்.
இந்தநிலையில், 15 மாணவர்களின் பெற்றோர் பணய தொகையை அளித்ததால் அவர்களை பயங்கரவாதிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவித்தனர். மீதமுள்ள மாணவர்களை தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில், இதுவரை 56 மாணவர்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பியோ அல்லது அவர்களால் விடுவிக்கப்பட்டோ உள்ளனர்.
இன்னும் 65 மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என நம்புகிறோம் என்று உள்ளூர் கிறிஸ்தவ ஆலய தலைவர் ஹயப் கூறியுள்ளார்.
உள்ளூர் அதிகாரிகள் தாங்கள் மீட்கும் தொகையை எதிர்ப்பதாகவும், பணம் செலுத்துபவர்களை சிறையில் அடைப்பதாகவும் மிரட்டியதால், எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதை ஹயாப் கூற
வடமேற்கு மற்றும் மத்திய நைஜீரியாவை நீண்டகாலமாக பயமுறுத்தி, கொள்ளையடித்தல், கால்நடைகளைத் திருடுவது போன்ற அட்டூழியங்களை செய்யும் உள்நாட்டில் அறியப்பட்ட ஆயுதக் கும்பல் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களை கடத்தியுள்ளனர்.
வடகிழக்கில் 12 வருட கிளர்ச்சி மோதலில் சுமார் 40,000 மக்கள் உயிரிழந்துள்ளதோடுஇரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
நைஜீரிய ஜிஹாதிகள் கடந்த காலத்தில் பாரிய கடத்தல்களை மேற்கொண்டனர். இதில் சிபோக் என்ற கிராமத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகள் 2014இல் கடத்தப்பட்டனர். அந்த சிறுமிகளில் சிலர் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.