உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா சர்ச்சைக்குரிய எரிவாயு குழாயைப் பயன்படுத்தினால் மேலும் தடைகள் விதிக்கப்படலாம் என ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
தலைநகர் கியேவுக்கான வருகையின் போது உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் நோர்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தின் மீதான தனது கவலையை புரிந்து கொண்டதாக அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறினார்.
உக்ரேனின் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகக் கூறி ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த திட்டத்தை எதிர்க்கிறார். இது பால்டிக் கடலின் கீழ் இயங்கும் மற்றும் ஜேர்மனிக்கு இரட்டை ரஷ்ய எரிவாயு ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும்.
ரஷ்ய தலைமையிலான நோர்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயு குழாய்த்திட்டம், பிராந்தியத்தின் ஆற்றல் விநியோகத்தின் மீது மாஸ்கோவின் பிடியை இறுக்கி அதன் செல்வாக்கை வலுப்படுத்தும் என்று உக்ரேன் அஞ்சுகிறது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஜெலென்ஸ்கி இந்த திட்டத்தை கிரெம்ளினின் புவிசார் அரசியல் ஆயுதம் என்று விபரித்தார், இது ஐரோப்பா முழுவதும் ஆபத்தானது என்று அவர் கூறினார்
ஆனால், 16 வருடங்கள் பதவியில் இருந்த பின்னர் இந்த இலையுதிர்காலத்தில் தனது பதவியை துறக்கும் மெர்க்கல் உக்ரேனுக்கு எதிராக நோர்ட் ஸ்ட்ரீம் 2 பயன்படுத்தக் கூடாது என்று பெர்லின் வொஷிங்டனுடன் ஒப்புக் கொண்டார்.
எரிவாயு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டால், ஜேர்மனிக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் மாஸ்கோவிற்கு எதிராக தடைகள் பயன்படுத்தப்படலாம்.
உக்ரேனிய குழாய் வழியாக ரஷ்ய எரிவாயுவை வழங்குவதற்கான ஒப்பந்தம் முடிவடையும் போது மூன்று ஆண்டுகளில் என்ன நடக்கும் என்று தான் கவலைப்படுவதாக ஜெலென்ஸ்கி கூறினார். போக்குவரத்து கட்டணத்தில் பில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பு உக்ரேனின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்திய மெர்க்கெல், உக்ரேனின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையை விரிவுபடுத்துவதற்கு ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேல் வழங்குவதாக உறுதியளித்தார்.
ரஷ்யா ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிவாயுவில் சுமார் 40 சதவீத வினியோகத்தை செய்கிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லை ஆனால் அதன் ஒற்றை சந்தையில் பங்கு பெறுகிறது. புதிய குழாய்த்திட்டம் ஆண்டுக்கு 55 பில்லியன் கன மீட்டருக்கு பால்டிக் கீழ் செல்லும் வாயுவின் அளவை அதிகரிக்கும்.