இந்தியாவில் இதுவரை 58.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி நாட்டில் இதுவரை மொத்தமாக 58,89,97,805 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மாநிலங்களின் கையிருப்பில் 3.29 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம் நாடு முழுவதம் ஜுன் மாதம் 21 ஆம் திகதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் கொள்கையை மத்திய அரசு அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.