இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சரின் மனைவிக்கு தொற்று உறுதியாகியதையடுத்து, தானும் தமது குடும்பத்தாரும் தனிமைப்படுத்தலில் இருப்பதாக அவர் கடந்த 22ஆம் திகதி முகப்புத்தகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்கும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தற்போது இராஜாங்க அமைச்சருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.