கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களினால், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின், ஒரு தேர்தல் பேரணியை இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒன்ராறியோவின் போல்டனில் ஆதரவாளர்களுக்கு உரையாற்ற இருந்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நிகழ்வு நிறுத்தப்பட்டது.
ட்ரூடோ பேசுவதற்கு முன்பாக, டசன் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் கூடி அநாகரீகமாக கூச்சலிட்டனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) பேரணியில், இரண்டு மணிநேர தாமதத்தைத் தொடர்ந்து நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. பின்னர் அவரது பிரச்சாரப் பேருந்தை பொலிஸார் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
அமைப்பாளர்கள், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாததால் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய நாட்களில் கொவிட்-19 தடுப்பூசிகள் மற்றும் அரசாங்க கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களால் பிரதமரின் பிரசார முயற்சிகள் முடங்கியுள்ளன.
தொற்றுநோய் அனைவருக்கும் எப்படி கடினமாக இருந்தது என்பதை ஆர்ப்பாட்டங்கள் காட்டுகின்றன என என அங்கிருந்த ஒருவர் கூறினார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, நோபல்டன் நகரத்தில் உள்ள ஒரு வெதுப்பகத்துக்கான பிரதமரின் வருகைக்கு மக்கள் இடையூறு விளைவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.