ரஷ்யாவிடம் இருந்து 300 கோடி ரூபாய் செலவில் 70 ஆயிரம் AK-103 போர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய விமானப்படை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த துப்பாக்கிகளால் போர்த் திறன் மேம்பட்டு தீவிரவாத தாக்குதல்களை இன்னும் திறமையாக சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப்படைக்கு மொத்தம் ஒன்றரை லட்சம் நவீன துப்பாக்கிகள் தேவைப்படுகின்றன. தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள குறித்த துப்பாக்கிகள், நாட்டின் பல பகுதிகளில் உள்ள விமானப்படை தளங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கருடா சிறப்பு எனப்படும் படையினருக்கு வழங்கப்படவுள்ளது.
கிழக்கு லடாகில் சீனாவுடன் மோதல் போக்கு ஏற்பட்ட பிறகு சுமார் ஒன்றரை இலட்சம் அமெரிக்க தயாரிப்பான Sig Sauer துப்பாக்கிகள், 16 ஆயிரம் Negev Light Machine Guns ஆகியவற்றையும் இந்தியா கொள்வனவு செய்துள்ளது.