இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்திற்கான தடை செப்டம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் வந்தே பாரத், ஏர் பபிள் திட்டங்களின்கீழ் பயணிகள் விமானங்கள் சரக்கு விமானங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்திருந்த நிலையில், கடந்த 2020 மார்ச் 23 ஆம் திகதி முதல் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த தடை தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செப்டம்பர் 31 ஆம் திகதிவரை சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படாது எனவும் விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.