ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய சூழல் இந்தியாவின் பாதுகாப்பில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையை சாதகமாக பயன்படுத்தி தேசவிரோத சக்திகள் இந்தியாவிற்குள் ஊடுருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், அதனை தடுப்பதற்கு மத்திய அரசு தயார் நிலையில், உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் காணொலியூடாக கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், நவீன தொழிநுட்பத்தின் வாயிலாக தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும். இது போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க புது உத்திகளை கையாள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இந்தியா – பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கையில் குறைப்பாடு உள்ளதாக தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் நாம் பாகிஸ்தானிடம் உஷாராக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.