இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி முடிக்கும் வரை தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை தடை செய்திருப்பதால் 91 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டொக்டர் சவுமியா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நோய்த்தடுப்புக்கான தேசிய தொழிநுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் டொக்டர் என்.கே.அரோரா, வயது வந்தோர் 100 சதவீதமானோருக்கு தடுப்பூசி போடப்படுகிற வரையில், இந்தியா மீண்டும் ஏற்றுமதியை தொடங்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய கவனம் தனது சொந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவது எனத் தெரிவித்த அவர், குறைந்த பட்சம் வயது வந்தோர் அனைவருக்கும் ஒருடோஸ் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கான கையிருப்பை ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்த அவர், அதற்கு பிறகுதான் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.