இங்கிலாந்தில் செல்லப்பிராணிகளை திருடுவது ஒரு குற்றச் செயலாக கருதப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொவிட் முடக்க நிலை காலத்தின் போது, பதிவான திருட்டுக்களின் அதிகரிப்புக்கு பிறகு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
செல்லப்பிராணியின் திருட்டு தற்போது ஒரு உரிமையாளரின் சொத்து இழப்பாகக் கருதப்படுகிறது. இந்த திட்டம் செல்லப்பிராணி திருட்டு பணிக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளில் ஒன்றாகும் .
கடந்த ஆண்டு சுமார் 2,000 நாய்கள் திருடப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகள், பொலிஸ்துறை, வழக்குரைஞர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அடங்கிய பணிக்குழு என்பன, விலங்கு நலக் குழுக்கள், பிரச்சாரகர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிற நிபுணர்களிடமிருந்து சான்றுகளைப் பெற்றது.
இதன் அறிக்கையில் பொலிஸ்துறையினரால் பதிவு செய்யப்பட்ட 10 செல்லப்பிராணி திருட்டுகளில் ஏழு நாய்கள் சம்பந்தப்பட்டவை.
திருட்டுச் சட்டம் 1968ஆம் ஆண்டின் கீழ் குற்றங்கள் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் நீடிக்கும் என்றாலும், அது பயன்படுத்தப்பட்டதற்கான சிறிய ஆதாரங்கள் இல்லை என்று அமைச்சர்கள் கூறுகின்றனர்.
செல்லப்பிராணிகளைக் கடத்தும் புதிய குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனை என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.