நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 30 வயதுக்கு குறைவான 4 பேரும் 60 வயதுக்கு குறைவான 25 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 117 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 951 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 59 ஆயிரத்து 456 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 3 ஆயிரத்து 333 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 3 இலட்சத்து 82 ஆயிரத்து 476 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 67 ஆயிரத்து 32 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.