இந்தியாவுடனான நேரடி விமான போக்குவரத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் குவைத் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு தடுப்பூசியை முழுமையாக செலுத்தி இருப்பது, Alhosn என்ற செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பரிசோதனை சான்றிதழ்களையும் குவைத் அரசு கட்டாயமாக்கியுள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.
தற்போது கொரோனா தொற்றின் தீவிரம் குறைவடைந்து வருகின்ற நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து வழமைக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.