கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட மவுண்ட்வேர்ணன், போகாவத்தை ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இப்பகுதி மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதன் பின்னர், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் இதனை கவனத்திற்கொண்டு உடனடியாக இப்பகுதிக்கு 3500 சினோபார்ம் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுத்த நிலையில், இன்றைய தினம் அந்த தடுப்பூசிகள் ஏற்றப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.