கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அங்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று, நிபா வைரஸ் ஆகியன பரவி வருகின்ற நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி கர்நாடகத்தில் படிக்கும் மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கேரள மாநிலத்தவர்கள், சொந்த ஊருக்கு சென்றிருந்தால் அவர்கள் கர்நாடகத்திற்கு வருவதை ஒக்டோபர் மாதம் இறுதி வரை ஒத்திவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் தவிர்க்க முடியாத வேலைகள் இருந்தால் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செல்லலாம் எனவும் கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.