ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹேர நீர்த்தேகத்திற்கு அருகில் பதிவான நிலநடுக்கம் நாட்டின் நிலப்பரப்பிற்குள் ஏற்பட்டதல்லவென பேராதனை பல்கலைகழகத்தின் புவியியல் தொடர்பான சிரேஸ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலநிலநடுக்கமானது சுமத்ரா தீவு பகுதியிலேயே ஏற்பட்டுள்ளதென்றும் அந்த சந்தர்ப்பத்தில் உலக நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குள் எந்தவொரு நிலநடுக்கமும் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, லுணுகம்வெஹெர பிரதேசத்தில் பதிவான நிலநடுக்கம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
லுணுகம்வெஹெர பகுதியில் நேற்று முற்பகல் 10.38 மணியளவில் 2.4 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.