தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தினை அமைத்து அந்த நாட்டை இஸ்லாமிய எமிரேட்ஸ் என அறிவித்துள்ளனர்.
இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதிகளுக்கான கருப்பு பட்டியலில் உள்ள முல்லாஹ் மொஹமட் ஹஸன் அகுந்த தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், தலிபான்களின் இணை நிறுவுனரான முல்லாஹ் அப்துல் கானி பரதர் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
20 வருடங்களான ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க துருப்பினர்கள் கடந்த மாதம் 31 ஆம் திகதியுடன் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
இதனையடுத்து, ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அங்கு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.
எனினும், தலிபான்களின் ஆட்சியை விரும்பாத இலட்சக்கணக்கான பொதுமக்கள் ஆப்கானிஸ்தானில் விட்டு வெளியேறியேறியிருந்தனர்.
இந்நிலையில், நாட்டின் பொருளாதாரம் மற்றும், சர்வதேச அங்கிகாரத்தினை பெறுவதில் புதிய இடைக்கால அரசாங்கம் பல சவால்களை எதிர்நோக்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.