வார விடுமுறை நாளானா ஞாயிற்றுக்கிழமைக்கும், வேலை நாளான திங்கட்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வேலையிழப்பு குறித்து ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த தீர்மானித்துள்ளமை தொடர்பான பத்திரிக்கை செய்தியையும் வெளியிட்டுள்ளார்.
குறித்த பத்திரிக்கை செய்தியில் போர்டு நிறுவனத்தின் குறித்த நடவடிக்கை காரணமாக 4 ஆயிரம் சிறு நிறுவனங்கள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் மேற்கோள் காட்டியுள்ளார்.
அதேநேரம் வார விடுமுறை நாளானா ஞாயிற்றுக்கிழமைக்கும், வேலை நாளான திங்கட்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் மோடியின் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம் எனக் குறிப்பிட்ட அவர் வேலையே இல்லாதபோது அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் என்ன, திங்கட்கிழமையாக இருந்தால் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.