மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 35இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மெக்ஸிகோவில் 35இலட்சத்து ஆறாயிரத்து 743பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 15ஆவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில் இதுவரை இரண்டு இலட்சத்து 67ஆயிரத்து 524பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 12ஆயிரத்து 511பேர் பாதிக்கப்பட்டதோடு 675பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மூன்று இலட்சத்து 95ஆயிரத்து 270பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்காயிரத்து 798பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 28இலட்சத்து 43ஆயிரத்து 949பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.