இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம் பார்கவா, மற்றும் வி.கே.பால் ஆகியோர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் அவதானமாக பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறியுள்ளனர்.
மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 சதவீதமானோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்கள் 62 சதவீதமானோர் ஒரு டோஸ் மட்டும் செலுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.