பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 26ஆயிரத்து 911பேர் பாதிக்கப்பட்டதோடு 158பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 73இலட்சத்து 39ஆயிரத்து 009பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 805பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12இலட்சத்து 97ஆயிரத்து 175பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 81பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 59இலட்சத்து ஏழாயிரத்து 029பேர் பூரண குணமடைந்துள்ளனர்.